உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லால்பேட்டை பேரூராட்சியில் 900 மனுக்கள் குவிந்தன

லால்பேட்டை பேரூராட்சியில் 900 மனுக்கள் குவிந்தன

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.பேரூராட்சி தலைவர் பாத்திமா ஹாரிஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அன்வர் சதாத் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் தங்கவேல் வரவேற்றார். சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்தார்.இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைள் தொடர்பாக 900 மனுக்கள் பெறப்பட்டன.நிகழ்ச்சியில் தாசில்தார் தமிழ்ச்செல்வன், மண்டல அலுவலர் ஜெயச்சந்திரன், துணை தாசில்தார் சங்கர், வட்ட வழங்கல் அலுவலர் அன்புராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை