உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.20 லட்சம் செலவு செய்த லாரி ஒரே நாளில் பழுதான அவலம்

ரூ.20 லட்சம் செலவு செய்த லாரி ஒரே நாளில் பழுதான அவலம்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சியில் 20 லட்சம் ரூபாய் செலவு செய்து கொண்டு வரப்பட்ட லாரி ஒரே நாளில் பழுதான அவலம் ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் பயன்படாமல் இருந்த பழைய லாரிகளை பல லட்சம் செலவு செய்து டிப்பர் லாரியாகவும், டேங்கர் லாரியாகவும் மாற்றினர். இவை 6 மாதத்துக்கு முன் புதுப்பிக்கப்பட்டு நகராட்சிக்கு வந்தது.இரண்டு டேங்கர் லாரிகளில் ஒன்று கழிவுநீர் அகற்றவும், மற்றொன்று குடிநீர் வழங்கவும் பயன்படுத்த முடிவு செய்தனர். மக்கள் தங்கள் வீட்டின் செப்டிக் டேங்க்கை தனியார் லாரிகள் மூலம் பல ஆயிரம் செலவு செய்து சுத்தம் செய்கின்றனர்.இதற்கு மாற்றாக நகராட்சியில் உள்ள கழிவுநீர் அகற்றும் டேங்கர் லாரியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் குறைந்த கட்டணத்தில் சேவை செய்ய முடியும். ஆனால், 6 மாதங்களாகியும் இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் நிறுத்தி வைத்துள்ளனர்.அதே போல் 20 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட டிப்பர் லாரியை 6 மாதத்துக்கு பிறகு கடந்த வாரம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். ஆனால், அன்றைய தினமே லாரி பழுதானது. இதை சரி செய்ய பல நாட்களாக காராமணிக்குப்பம் ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைத்துள்ளனர். அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் வரிப்பணம் பாழாகிறது. எனவே, இரண்டு லாரிகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை