உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அலற வைக்கும் ஹாரன் சத்தம்: சாலையில் விபத்து அபாயம்

அலற வைக்கும் ஹாரன் சத்தம்: சாலையில் விபத்து அபாயம்

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பகுதியில் அலற வைக்கும் சத்தத்துடன் செல்லும் இரு சக்கர வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலுார்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதி வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மந்தாரக்குப்பம் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் அதிக ஒலி எழுப்பும் 'ஹாரன்' மற்றும் சைலன்சரில் அதிக சத்தத்துடன் இருசக்கர வாகனத்தில் வாலிபர்கள் வேகமாக செல்கின்றனர். இருசக்கர வாகனங்களில் நாய் குரைத்தல், குழந்தை அழுதல், ஆம்புலன்ஸ் வண்டி சத்தம், வெடி சத்தம் என பல்வேறு சத்தங்களில் 'ஹாரன்' சத்தம் எழுப்புவதால், எதிரில் இதர வாகனங்களில் வருபவர்களும், சாலையில் நடந்து செல்பவர்களும், பாதிப்பிற்குள்ளாகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை