மேலும் செய்திகள்
வடலுாரில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
10-Oct-2025
வடலுார்: மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர் வடலுார் அடுத்த வானதிராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 54; பண்ருட்டி சாலையில் உள்ள பர்னிச்சர் மார்ட் கடையில் மர வேலை செய்பவர். இவர் நேற்று அதிகாலை வேலை முடிந்து வேலு என்பவருடன் பைக்கில் வீடு திரும்பினார். காட்டுக்கொல்லை ரயில்வே கேட் அருகில் பைக்கை நிறுத்தி ஆறுமுகம் தனது மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் ஆறுமுகம் மற்றும், வேலு இருவரையும் மிரட்டி ஆறுமுகத்தின், 19 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பியோடனார்.புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து, மொபைல் பறித்து தப்பிய நபரை தேடி வருகின்றனர்.
10-Oct-2025