மேலும் செய்திகள்
பேச்சு போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு
28-Oct-2024
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே தொழிகளுடன் பழுகுவதை பெற்றோர்கள் கண்டித்தால் பள்ளி சென்ற மாணவி விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நடுவீரப்பட்டு பகுதியைசேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் நடுவீரப்பட்டு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகின்றார்.இவர் தனது தோழிகளுடன் பழகுவதை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த மாணவி நேற்று காலை 8:15 மணிக்கு பள்ளிக்கு வந்து தாம் எடுத்து வந்த எறும்பு மருந்தை கரைத்து குடித்துவிட்டு சகமாணவிகளிடம் தெரிவித்தார். தகவல் அறிந்த பள்ளி ஆசிரியர்கள் உடன் மாணவியை நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜீவிகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
28-Oct-2024