உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நீதிபதி மீது ஷூ வீசிய நபரை கண்டித்து வி.சி.க.,வினர் உருவபொம்மை எரிப்பு விருத்தாசலத்தில் திடீர் பரபரப்பு

நீதிபதி மீது ஷூ வீசிய நபரை கண்டித்து வி.சி.க.,வினர் உருவபொம்மை எரிப்பு விருத்தாசலத்தில் திடீர் பரபரப்பு

விருத்தாசலம்:நீதிபதி மீது ஷூ வீசிய நபரை கண்டித்து, விருத்தாசலத்தில் வி.சி.க.,வினர் அவரது உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு நிலவியது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிேஷார் என்பவர் ஷூவை வீசியதை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில், வி.சி.க., மைய மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமையில் பகல் 12:00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், ஷூவை வீசிய நபரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை கண்டித்து கோஷமிட்டனர். திடீரென வந்த ஆட்டோவில் இருந்து உருவபொம்மையை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். அதிர்ச்சியடைந்த போலீசார், தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மண்டல செயலாளர் ராஜ்குமார், நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, பொருளாளர்கள் சக்திவேல், எழில்வான்சிறப்பு, தென்றல், அய்யாதுரை உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, கரூரில் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தில் பலியான 41 நபர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !