உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர்கள் தகுதித் தேர்வு கடலுாரில் 1,366 பேர் எழுதினர்

ஆசிரியர்கள் தகுதித் தேர்வு கடலுாரில் 1,366 பேர் எழுதினர்

கடலுார் : கடலுாரில் நடந்த பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வை, 1,366 பேர் எழுதினர்.அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் தகுதிக்கான போட்டி எழுத்துத் தேர்வு நேற்று நடத்தப்பட்டது. கடலுாரில் புனித அன்னாள் பள்ளி, செயின்ட் ஜோசப் பள்ளி, சி.கே மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி ஆகிய நான்கு மையங்களில் நடந்தது.கடலுார் மாவட்டத்தில் 1,407 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 1,366 பேர் நேற்று தேர்வு எழுதினர். காலை 10:00 மணிக்கு துவங்கிய தேர்வு, மதியம் 1:00 வரை நடந்தது. தேர்வை சி.இ.ஓ., பழனி தலைமையில் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்து நடத்தினர்.தேர்வு மையங்களை கலெக்டர் அருண்தம்புராஜ், டி.ஆர்.ஓ. ராஜசேகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ