உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீசாரிடம் பைக்கை தரக்கோரி பிளேடால் கிழித்துக்கொண்ட வாலிபர்

போலீசாரிடம் பைக்கை தரக்கோரி பிளேடால் கிழித்துக்கொண்ட வாலிபர்

கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பாக பிளேடால் கையை கிழித்துக்கொண்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. கடலுார் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த 20 வயது வாலிபர் கடந்த 23ம் தேதி, பதிவெண் இல்லாத பல்சர் பைக்கை ஓட்டிவந்தார். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், பைக்கை பறிமுதல் செய்தனர். பைக்கை திருப்பித்தர வேண்டும் எனக்கோரி நேற்று அந்த வாலிபர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். போலீசார் பைக்கை தர மறுக்கவே, அதிருப்தியடைந்த அந்த வாலிபர் பைக்கை தரவில்லையென்றால் பிளேடால் கையை கிழித்துக்கொள்வேன் என மிரட்டி, போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே கையை அறுத்துக்கொண்டார். அங்கிருந்த போலீசார், வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை