உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருவந்திபுரம் கோவிலில் 28ம் தேதி ஆடிப்பூர உற்சவம்

திருவந்திபுரம் கோவிலில் 28ம் தேதி ஆடிப்பூர உற்சவம்

கடலுார்: திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஆண்டாள் ஆடிப்பூரம் திருவிழா, வரும் 28ம் தேதி நடக்கிறது. கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஆண்டாள் ஆடிப்பூரம் திருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி காலை 6:00 மணிக்கு மகா மண்டபத்தில் சிறப்பு யாகம், பூஜைகள் நடக்கிறது. பெருமாள், ஆண்டாள், தேசிகர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைகள் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாளுக்கு சேவை சாற்றுமுறை, தீர்த்த பிரசாத விநியோகம் நடக்கிறது. இதனை தொடர்ந்து பெருமாள், ஆண்டாள் ரதத்தில் புறப்பாடு செய்து வீதியுலாவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 9:00 மணிக்கு நடைபெறும் ஏகாந்த சேவையில் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மகாராஜபுரம் கணேஷ் விஸ்வநாதன் வாய்ப்பாட்டு, குமார் வயலின், கலைமாமணி திருவாரூர் பக்தவச்சலம் மிருதங்கம், திருச்சி கிருஷ்ணசாமி கடம் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். கடலுார், ஜூலை 24-திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஆண்டாள் ஆடிப்பூரம் திருவிழா, வரும் 28ம் தேதி நடக்கிறது. கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஆண்டாள் ஆடிப்பூரம் திருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி காலை 6:00 மணிக்கு மகா மண்டபத்தில் சிறப்பு யாகம், பூஜைகள் நடக்கிறது. பெருமாள், ஆண்டாள், தேசிகர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைகள் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாளுக்கு சேவை சாற்றுமுறை, தீர்த்த பிரசாத விநியோகம் நடக்கிறது. இதனை தொடர்ந்து பெருமாள், ஆண்டாள் ரதத்தில் புறப்பாடு செய்து வீதியுலாவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 9:00 மணிக்கு நடைபெறும் ஏகாந்த சேவையில் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மகாராஜபுரம் கணேஷ் விஸ்வநாதன் வாய்ப்பாட்டு, குமார் வயலின், கலைமாமணி திருவாரூர் பக்தவச்சலம் மிருதங்கம், திருச்சி கிருஷ்ணசாமி கடம் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடக்கி றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை