உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாகனம் ஓட்டும் சிறுவர்களால் விபத்து அபாயம்

வாகனம் ஓட்டும் சிறுவர்களால் விபத்து அபாயம்

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பகுதியில் லைசென்ஸ் இல்லாமல் சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.மந்தாரக்குப்பம் பகுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் 18 வயது நிரம்பாதவர்கள் ஓட்டுனர் உரிமம் இன்றி கார், இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்களை வேகமாக ஓட்டி வருகின்றனர். போக்குவரத்து விதிகமை மீறி சாலையில் தாறுமாறாக செல்வதால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் சாகசம் மேற்கொண்டு, சைலன்ஸ்ரில் அதிக சத்துத்துடனும் ஹாயாக செல்கின்றனர். போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது, மாற்று பாதை வழியாக எளிதில் சென்று விடுகின்றனர்.இதனால், கடலுார்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே, விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் நவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி