உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் பழுது ராமநத்தம் அருகே விபத்து அபாயம்

தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் பழுது ராமநத்தம் அருகே விபத்து அபாயம்

ராமநத்தம்: ராமநத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட எல்.இ.டி., சிக்னல் விளக்குகள் பழுதானதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியே, பெரம்பலூர், திருச்சி, மதுரை, விழுப்புரம் பகுதிகளுக்கு விரைவில் செல்ல முடிவதால், தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலையில் 100 கி.மீ., வேகத்திற்கு மேல் வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க, விபத்து ஏற்படும் இடங்களில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கையும் விதமாக, 24 மணிநேரமும் எரியும் எல்.இ.டி., எச்சரிக்கை சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டன.அதில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ராமநத்தம் அடுத்த எழுத்தூர் வளைவு மற்றும் இணைப்பு சாலை, வெங்கனூர் பகுதிகளில் எல்.இ.டி., சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்பட்டது. இந்நிலையில், எழுத்துார் வளைவு மற்றும் இணைப்பு சாலையில் அமைக்கப்பட்ட எல்.இ.டி., சிக்னல் விளக்குகள், கடந்த சில மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்காததால் மீண்டும் அப்பகுதியில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, ராமநத்தம் அருகே பழுதடைந்த எல்.இ.டி., சிக்னல் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை