உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை அ.தி.மு.க., வினர் போலீசில் புகார்

அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை அ.தி.மு.க., வினர் போலீசில் புகார்

விருத்தாசலம்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மீது அவதுாறு பரப்பியதாக அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அ.தி.மு.க.,வினர் போலீசில் புகார் அளித்தனர். அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மீது அவதுாறு ஏற்படுத்தும் வகையில் தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கேலிச்சித்திரம் வெளியானது. இதைக் கண்டித்து, தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், அமைச்சருமான ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம், அ.தி.மு.க., மேற்கு மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் விஜயகுமார், ஐ.டி.,விங் மண்டல செயலாளர் அருண் ஆகியோர் தனித்தனியே மனு அளித்தனர். மனுவில், 'தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் பி.என்.எஸ்., 2023ன் கீழ் இரு அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் இடையே வெறுப்பு மற்றும் மோதலை துாண்டும் வகையிலும், சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும் வகையிலும் அமைச்சர் ராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவை நீக்கவும், அதனை பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென' , கூறியிருந்தனர். நகர செயலாளர் சந்திரகுமார், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் அருளழகன், ஒன்றிய செயலாளர்கள் பச்சமுத்து, வேல்முருகன், தம்பிதுரை, நகர துணை செயலாளர் மணிவண்ணன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ