உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை பண்ருட்டி சேர்மன் தகவல்

நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை பண்ருட்டி சேர்மன் தகவல்

பண்ருட்டி : பண்ருட்டியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தெரிவித்தார்.பண்ருட்டி நகராட்சி கூட்டம் சேர்மன் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷ்னர் பானுமதி, துணை சேர்மன் சிவா, பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:காய்கறி மார்க்கெட் வாடகை உடனே வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் இடித்து அகற்றுவதால் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். அதனால், பலமிழந்த கட்டடங்களை மட்டும் புதுப்பித்து தர வேண்டும். இதனால் அனைத்து வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காது, தெரு நாய்களை பிடிக்க சுகாதாரதுறை சார்பில் எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, கோரிக்கைள் முன் வைத்தனர்.சேர்மன் ராஜேந்திரன் பேசுகையில், நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்படும். அதன் மூலம் தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படும். மேலும், நகரம் வளர்ச்சிபெற வணிகர்கள் பாதிக்காமல் புதிய மார்க்கெட் ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும். அதற்கான இடம் கிடைக்கவில்லை. இதனால் தற்போதைய மார்க்கெட்டில் புதிய கட்டடம் கட்டி புதுப்பிக்க முடிவு செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை