அரசு பள்ளியில் கூடுதல் கட்டடம் : அமைச்சர் திறந்து வைப்பு
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் பள்ளி மற்றும் ரெட்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 76 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டடங்கள், ரெட்டியூர் பள்ளியில் 7.56 லட்சம் ரூபாய் மதிப்பில் சமையலறை திறப்பு விழா நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம், புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து, 24 லட்சம் ரூபாய் மதிப்பில் லால்பேட்டை மற்றும் உடையார்கோவில் புதிய ரேஷன் கடை, 36 லட்சம் ரூபாய் மதிப்பில் வருவாய் ஆய்வாளர் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கூடுதல் கலெக்டர் பிரியங்கா, சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, தாசில்தார் பிரகாஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இளஞ்செல்வி, ஆசிரியர் மனோகர், செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பழைய நினைவுகளை பகிர்ந்த அமைச்சர்
காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளியில் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்த, முன்னாள் மாணவரான அமைச்சர் பன்னீர்செல்வம், தான் அமர்ந்து படித்த வகுப்பறையை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் காண்பித்து, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அருகில் நின்றிருந்த பேரூராட்சித் தலைவர் கணேசமூர்த்தியை அழைத்து இவரும் எனது சக மாணவர் தான் என, அறிமுகம் செய்தார்.