வளர்ச்சி பணிகள்; கூடுதல் கலெக்டர் ஆய்வு
புவனகிரி; கீரப்பாளையம் ஒன்றியம், சி.மேலவன்னியூரில் வளர்ச்சி பணிகள் குறித்து கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். கீரப்பாளையம் ஒன்றியம், சி.மேல வன்னியூரில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரியங்கா ஆய்வு செய்தார். அப்போது, மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து பள்ளி வகுப்பறை கட்டுமான பணிகள், கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டுமான பணிகள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், ஆனந்தன், இன்ஜினியர்கள் பூவராகவன், அருள்மொழி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாயகிருஷ்ணன் உடனிருந்தனர்.