உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆதிவராகநத்தம் பள்ளி சிறப்பிடம்

ஆதிவராகநத்தம் பள்ளி சிறப்பிடம்

புவனகிரி: விருத்தாசலம் கல்வி மாவட்டத்தின் ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நடப்பு கல்வியாண்டில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப் பட்டுள்ளது.விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் ஆண்டு தோறும் வட்டார அளவில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, கல்வித்துறை சார்பில் ஊக்கப்படுத்தி வருகின்றனர். நடப்பு கல்வியாண்டில், மேல்புவனகிரி வட்டார அளவில், சிறந்த பள்ளிகளை தேர்வு செய்தனர். இதில் ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியை ராதிகா உள்ளிட்ட ஆசிரியர்களை சமூக அமைப்பினர் உள்ளிட்ட பலர் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ