உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., கவுன்சிலர் இல்ல திருமணம்

அ.தி.மு.க., கவுன்சிலர் இல்ல திருமணம்

கடலுார், : கடலுார் அடுத்த குடிகாடு அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தன்-இந்திரா தம்பதி மகன் விக்னேஷ், அனுக்கம்பட்டு குமார் - சிவகாமி தம்பதி மகள் வினோதினி திருமணம் கடலுார் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் சொரத்துார் ராஜேந்திரன், சம்பத், பாண்டியன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், மாவட்ட அவைத் தலைவர் குமார், எம்.ஜி.ஆர்.,மன்ற துணை செயலாளர் சுப்ரமணியன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர். ஒன்றிய செயலாளர்கள் பாஷ்யம், கோவிந்தராஜ், வினோத், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், தெற்கு மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ராஜசேகர், நகர செயலாளர் பாபு, பேரூராட்சி செயலாளர் ஆனந்த்பாபு, அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ