| ADDED : பிப் 21, 2024 08:02 AM
வடலூர் : நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலையை நாளை (22ம் தேதி) அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.மாலை 4:00 மணிக்கு நடக்கும் விழாவில், அ.தி.மு.க., கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சர்கள் ,மாநில, மாவட்ட நகர ஒன்றிய ,சார்பு பணி நிர்வாகிகள், மகளிர் அணி உட்பட பலரும் கலந்து கொள்கின்றனர். சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு கடலூர் தெற்கு மாவட்ட எல்லையான பணிக்கன்குப்பத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து, 15 கி.மீட்டர் துாரத்திற்கு வழி நெடுகிலும் விளம்பர பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு மேள தாளங்கள் முழங்க அழைத்து வரப்படுகிறார். சாலையின் இரு புறமும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர். நெய்வேலி டவுன்ஷிப்பில் 500க்கும் மேற்பட்ட மகளிரணியினர் பூர்ண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்க உள்ளனர். இதனால் நெய்வேலி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.