உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மொழிப்போர் தியாகிகளுக்கு அ.தி.மு.க.,வினர் அஞ்சலி

மொழிப்போர் தியாகிகளுக்கு அ.தி.மு.க.,வினர் அஞ்சலி

கடலுார், : கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடந்தது.பாதிரிக்குப்பம் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாணவரணி செயலாளர் சிவா தலைமை தாங்கினார்.மாவட்ட அவை தலைவர் குமார், ஒன்றிய செய லாளர் காசிநாதன் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் சம்பத், மொழிப்போர் தியாகிகளின் படத்துக்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினார்.அப்போது, மீனவரணி தங்கமணி, பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், மாதவன், கந்தன், வினோத் ராஜ், ஜெ., பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், வர்த்தக பிரிவு வரதராஜன், மாவட்ட பிரதிநிதிகள் தமிழ் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ