மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
11-Jun-2025
சிதம்பரம் : சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கற்பனைச் செல்வம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாநிலத் துணைத் தலைவர் கண்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் மாதவன், பொருளாளர் ராமச்சந்திரன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாநில குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், மாவட்ட துணைத் தலைவர் செல்லையா, மாவட்டக்குழு ஆழ்வார் கண்டன உரையாற்றினர். விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி போடும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
11-Jun-2025