மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நிர்வாகி இல்ல திருமணம்
13-Sep-2025
விருத்தாசலம்,: விருத்தாசலத்தில் நகர அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் அருளழகன், வர்த்தக அணி துணை செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் தங்கராசு வரவேற்றார். மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கினார். விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலாஜி பயிற்சி வழங்கினார். கூட்டத்தில், தி.மு.க., நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை பொது மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அனைத்து பூத்துகளிலும் அ.தி.மு.க., அதிக ஓட்டுகளை பெற கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் அரங்கமணிவண்ணன், விஜயகுமார், முக்தார் அலி, ராஜேந்திரன், வெங்கடேசன், ராஜேந்திரன், புஷ்பா வேங்கடவேணு உட்பட வட்ட செய லாளர்கள் பங்கேற்றனர். இதே போன்று, ஆலடி சாலையில் உள்ள மண்டபத்திலும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடந்தது.
13-Sep-2025