உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்

கடலுார் : கடலுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் பாதிரிக்குப்பம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் காசிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட துணை செயலாளர் பக்கிரி முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் லட்சுமி குமார் வரவேற்றார். பூத் கமிட்டி ஆய்வு பணி பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் அப்துல் ரகிம் பேசினார். முன்னாள் அமைச்சர் சம்பத் பேசுகையில், 'தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தினம் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை என சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய காவல் துறையே வேடிக்கை பார்க்கிறது. அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை தி.மு.க., அரசு நிறுத்தியுள்ளது' என்றார். கூட்டத்தில் நிர்வாகிகள் ஆதிநாராயணன், கல்யாணி ரமேஷ், வேல்முருகன், முருகன், கிரிஜா செந்தில்குமார், நாகமுத்து, தேவநாதன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை