உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி ஊராட்சியில் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் நுட்ப செயலாளர் கிருபாகரன் ஆகியோர் வரும் 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில், மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் ராம் மகேஷ், நிர்வாகிகள் மகேந்திரன், பாலமுருகன், அப்துல் ஹக், முகமது அலி, திருஞானசம்மந்தமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ