உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கருவேப்பிலங்குறிச்சியில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

கருவேப்பிலங்குறிச்சியில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் அ.தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது.மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர் தம்பிதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவரணி நிர்வாகி ஆனஸ்ட்ராஜ் வரவேற்றார். அமைப்பு செயலர் ஆசைமணி, செய்தி தொடர்பாளர் அதிவீரராமபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.இதில், மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், மாநில பேரவை துணை செயலர் அருள் அழகன், நகர செயலர் சந்திரகுமார், மண்டல செயலர் அருண், முன்னாள் ஒன்றிய சேர்மன் கனகசிகாமணி, மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., பேசுகையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்போது, 4 லட்சம் கோடி கடன் இருந்தது. தற்போது 8 லட்சத்து 33 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இந்தியாவில் அதிக கடன் வாங்கியதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை