உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தனியார் பஸ்களில் ஏர் ஹாரன் பறிமுதல்

தனியார் பஸ்களில் ஏர் ஹாரன் பறிமுதல்

சிதம்பரம்: சாலை விழிப்புணர்வு வார நிகழ்வையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. விழைவையொட்டி, சிதம்பரம் பஸ் நிலையத்தில், பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வு குறித்த நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், தனியார் பஸ்களில் உள்ள ஏர் ஹாரன்களை சோதனை மேற்கொண்டு, காவல் துறையினர் உதவியுடன் அகற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி