உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அகல் விளக்கு விற்பனை  ஜோர்

 அகல் விளக்கு விற்பனை  ஜோர்

விருத்தாசலம்: கார்த்திகை தீபத்தையொட்டி, விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் விற்பனை செய்யப்படும் கார்த்திகை தீப அகல் விளக்குகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். கார்த்திகை தீப திருவிழா தினத்தன்று, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இரவு நேரங்களில் கார்த்திகை தீப அகல் விளக்குகளை ஏற்றி வைப்பர். அப்படி ஏற்றி வைத்தால், தீய சக்திகள் நம்மை விட்டு அகலும் என்பது ஐ தீகம். இந்நிலையில், கார்த்திகை தீப திருவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் விற்பனை செய்யப்படும் அகல் விளக்குகளை வாங்க பொதுமக்கள் நேற்று குவிந்தனர். அப்போது, குத்துவிளக்கு, தாமரை, நட்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு வடிவிலான அகல் விளக்குகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி