உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கடலுாரில் 30ம் தேதி ரயில் மறியல் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசனை

 கடலுாரில் 30ம் தேதி ரயில் மறியல் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசனை

கடலுார்: கடலுார் மாநகர அனைத்துக்கட்சி மற்றும் குடியிருப்போர் சங்கம், பொது நல அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டம், சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள மா.கம்யூ.,அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் தி.மு.க.,எம்.எல்.ஏ., புகழேந்தி தலைமை தாங்கினார். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். காங்., மாநில செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர் திலகர், வி.சி.,மாநில நிர்வாகி தாமரைச்செல்வன், ம.தி.மு.க., சிவராமன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஷாஜகான், ரயில்வே பயணிகள் சங்க நிர்வாகி விஜயகுமார், குடியிருப்போர் சங்க தலைவர் பாலு பச்சையப்பன், தமிழ்நாடு மீனவர் பேரவை நிர்வாகி சுப்பராயன், எழுத்தாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பால்கி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கடலுார் ரயில்வே கோரிக்கைகளை லோக்சபாவில் வலியுறுத்திபேசிய எம்.பி.,விஷ்ணுபிரசாத்திற்கு நன்றி தெரிவித்தல்; புதுப்பிக்கப்பட்ட டவுன் ஹால் வாடகை கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தல்; திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய மேம்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்; மன்னார்குடி, மஹால், கம்பன், ராமேஸ்வரம், உழவன் உள்ளிட்ட இரவு நேர ரயில்கள் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்ல வேண்டும்; கடலுார் துறைமுகம் பாண்டி திண்டிவனம் இருப்புப்பாதை திட்டத்தை உருவாக்க வேண்டும்; விழுப்புரம் தஞ்சாவூர் இரட்டை ரயில் பாதையை அமைக்க வேண்டும்; என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 30ம் தேதி திருப்பாதிரிப்புலியூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை