உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாடு 

அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாடு 

கடலுார் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மூன்றாவது மாவட்ட மாநாடு கடலுார் புதுப்பாளையத்தில் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் நடராஜன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஆதவன் வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் பத்மநாபன் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். மாநில துணை தலைவர் சுப்பிரமணியம், மாநில செயலாளர் மனோகரன், நாகராஜன், அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் பேசினர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் அளிக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், இணை செயலாளர்கள் ஜமுனா, கலியபெருமாள், ஆதிலட்சுமி, மாவட்ட தணிக்கையாளர் தமிழரசி, கோட்ட தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராமநாதன், ஞானமணி பங்கேற்றனர். மாநில கவுரவ தலைவர் பரமேஸ்வரன் நிறைவுரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் வாசு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ