மேலும் செய்திகள்
ஓய்வூதியர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம்
26-Jul-2025
சிதம்பரம் : சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்டக் கிளை மாநாடு நடந்தது. வட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கலியமூர்த்தி சங்க கொடியேற்றினார். துணைத் தலைவர் முத்துக்குமரன் வரவேற்றார். கடலுார் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்பு தலைவர் மருதவாணன் மாநாட்டை துவக்கி வைத்தார். வட்ட செயலாளர் மனோகரன் அறிக்கை வாசித்தார், வட்ட பொருளாளர் ஞானப்பிரகாசம் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். நிர்வாகிகள் காசிநாதன், பழனி, குழந்தைவேலு, பக்கிரிசாமி, கவுன்சிலர் முத்துக்குமரன் வாழ்த்திப் பேசினர். புதிய வட்ட தலைவராக ஞானபிரகாசம், செயலாளராக மனோகர், பொருளாளராக ராணி தேர்வு செய்யப்பட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
26-Jul-2025