உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 

சிதம்பரம், ஆக. 20 – அண்ணாமலைப் பல்கலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறியியல் புலத்தில் 2002–2006ம் ஆண்டு பயின்று பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்களின் 20ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பொறியியல் புல முதல்வர் சரவணன் தலைமை தாங்கினார். பேராசிரியர் மீனா அபர்ணா வரவேற்றார்.  முன்னாள் மாணவர்கள் அருண் பாரத், வீரக்குமார், நடராஜன், சுரேஷ்குமார், ராம்நாத் அருணாச்சலம், தியாகராஜன் மற்றும் சத்தியமூர்த்தி, தீர்த்தகிரி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.   பொறியியல் புலத்தின் உள்ள மகளிர் காத்திருப்பு கூடத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தேவையான உதவிகள், தற்போதைய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது என முன்னாள் மாணவர்கள் உறுதியளித்தனர். முன்னாள் மாணவர் அருண் பாரத் நன்றி கூறினார் .      


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை