உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அம்பேத்கர் சிலை சேதம் வி.சி.க.,வினர் மறியல்

 அம்பேத்கர் சிலை சேதம் வி.சி.க.,வினர் மறியல்

சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம், சி.கொத்தங்குடியில் மார்பளவு அம்பேத்கர் சிலை உள்ளது. சிலையை சுற்றி பாதுகாப்புக்காக, இரும்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள், இரும்பு கூண்டை உடைத்து, அம்பேத்கர் சிலையை கற்களால் சேதப்படுத்தியுள்ளனர். இதையறிந்த அப்பகுதியினர், அதிகாலையில் அங்கு திரண்டதால், பதற்றம் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், சிலை உடைப்பை கண்டித்து வி.சி.க.,வினர், ஆர்ப்பாட்டம் நடத்தி, சாலை மறியலில், ஈடுபட்டனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து, மூன்று பேரை பிடித்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்