உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றப்பட்டும் மாறாத கடலுார் மாவட்ட இன்ஸ்.,கள்

மாற்றப்பட்டும் மாறாத கடலுார் மாவட்ட இன்ஸ்.,கள்

கடலுார் மற்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் பணிபுரியும் 74 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, விழுப்புரம் சரக டி.ஐ. ஜி.,யாக பணிபுரிந்த ஜியாவூல்ஹக் கடந்த 5ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.இதில், கடலுார் மாவட்டத்தில் பணிபுரியும் 30 இன்ஸ்பெக்டர்களுக்கு, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு இடமாறுதலுக்கான ஆர்டர் வந்தது. ஆனால், கடலுார் மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு இன்ஸ்பெக்டர்களும் இதுவரை ஆர்டர் வந்த மாவட்டத்திற்கு பணிக்கு செல்லாமல் உள்ளனர்.ஆர்டர் வந்த குறிப்பிட்ட சில நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு சென்று ரிப்போர்ட் செய்ய வேண்டும். ஆனால், இதற்கு நேர் மாறாக கடலுார் மாவட்டம் அவ்வளவு பிடித்தம் என்பதால் வேறு மாவட்டங்களுக்கு செல்ல ஆர்வம் இல்லாமல் கடலுார் மாவட்டத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ