உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் அன்புமணி நடைபயணம்; மாவட்ட தலைவர் அழைப்பு

கடலுாரில் அன்புமணி நடைபயணம்; மாவட்ட தலைவர் அழைப்பு

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் பா.ம.க.,தலைவர் அன்புமணி இன்று முதல் 3 நாட்களுக்கு மேற்கொள்ளும் உரிமை மீட்பு நடைபயணத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி கூறியுள்ளார். அவரது அறிக்கை: பா.ம.க., தலைவர் அன்புமணி கடலுார் மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொள் கிறார். இன்று (10ம் தேதி) காலை சாத்திப்பட்டு கிராமத்தில் முந்திரி, பலா விவசாயிகள் சந்திப்பு கூட்டம், மாலையில் பண்ருட்டி மற்றும் கடலுாரில் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது. நாளை (11ம் தேதி) கடலுார் தேவனாம்பட்டினத்தில் மீனவர்கள் சந்திப்பு கூட்டம், மாலை புவனகிரியில் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது. 12ம் தேதி, காலை வடலுார் வள்ளலார் சபைக்கு செல்கிறார். பின் நெய்வேலி ஆர்ச் கேட், விருத்தாசலம் பகுதியில் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது. நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை