உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடல் அலையில் சிக்கிய ஆந்திரா வாலிபர் சாவு

கடல் அலையில் சிக்கிய ஆந்திரா வாலிபர் சாவு

மரக்காணம் : கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் கடலில் குளித்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் நீரில் மூழ்கி இறந்தார்.ஆந்திரா மாநிலம், கீழ்திருப்பதியைச் சேர்ந்தவர் திவாகரன் மகன் தீவான், 35; இவரது மனைவி லோகேஸ்வரி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 15 பேருடன் புதுச்சேரி மாநிலத்திற்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர்.நேற்று மதியம் 1:30 மணியளவில் தீவான், லோகேஸ்வரி மற்றும் சிலர் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் கடலில் குளித்தனர்.அப்போது தீவான் கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கினார். உடன், அங்கிருந்த மீனவர்கள் தீவானை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இரவு இறந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ