உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலுார்; கடலுாரில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நடராஜன், தங்கவேல், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் மணித்தேவன் துவக்க உரையாற்றினார். விருத்தாசலம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ரங்கசாமி சிறப்புரையாற்றினார்.முறையான ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநில பொருளாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட நிர்வாகிகள் ரங்கநாதன், இளங்கோவன், ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை