உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாதிரிக்குப்பம் ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா

பாதிரிக்குப்பம் ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா

கடலுார்; கடலுார், பாதிரிக்குப்பம் ஊராட்சி தலைவர் சரவணனுக்கு பதவி காலம் முடிந்ததையொட்டி கூத்தப்பாக்கம் பக்ஷி திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடந்தது.வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். சரவண பவா ரியல் எஸ்டேட் உரிமையாளர் சக்திவேல் வரவேற்றார். தாசில்தார் பலராமன், டாக்டர் பிரவீன் அய்யப்பன், சப் இன்ஸ்பெக்டர் கதிரவன், பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன், மாவட்ட செங்குந்த மகாஜன சங்க பொதுச் செயலாளர் கோவிந்தசாமி, அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சிறப்பு தலைவர் மருதவாணன், எல்.ஐ.சி., நகர் தலைவர் மாயவேல், கூட்டமைப்பு தலைவர் பச்சையப்பன், வங்கி ஊழியர் சங்கம் வெங்கட்ரமணி, காவலர் நலச்சங்கத் தலைவர் விநாயகம், ஆசிரியர் பிரகாஷ் வாழ்த்திப் பேசினர்.ராமலிங்கம், மணிகண்டன், சுரேஷ், சித்ராலயா ரவிச்சந்திரன், சன் பிரைட் பிரகாஷ், பாஸ்கரன், கணேசன் டிரேடிங் பாலசுப்ரமணியன், ஸ்ரீலட்சுமி பேட்டரி ராஜூ, ஸ்ரீகிருஷ்ணா இன்டஸ்டிரிஸ் சங்கர், தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் ஜெயராமன், ஆண்டாள் புட்ஸ் குமார், அ.தி.மு.க., கிளை செயலாளர் தாமோதரன், சாய் இன்ஃபோ சக்திவேல், அனு மெடிக்கல்ஸ் வெங்கடேசன், வைத்தீஸ்வரா பில்டர்ஸ் வெங்கடேசன், ஆகாஷ், எம்.எல்.எஸ். ரியல் எஸ்டேட் கவிநிலவன், ஜவகர்லால் தாதா, கிரேட்வே டூர்ஸ் இளங்கேஸ்வரன், வைத்தீஸ்வரன் ஏஜன்சி திருவேங்கடம், காண்ட்ராக்டர்கள் சண்முகசுந்தர், குமரேசன், அன்னை பவன் பாஸ்கர், பாதிரிக்குப்பம் மக்கள், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் பங்கேற்றனர். விழாவை ராஜி முருகன் தொகுத்து வழங்கினார்.ஊராட்சி செயலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை