எஸ்.டி., சீயோன் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு, பூதங்குடி எஸ்.டி. சீயோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில், இப்பள்ளியில் மாணவர்கள் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி நிர்வாக இயக்குனர் தீபாசுஜின் தலைமை தாங்கினார். கோஜிரியோ கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். அகாடமி செயலாளர் இளவரசன் வரவேற்றார். சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். தாளாளர் சாமுவேல்சுஜின் பேசினார். விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் புகழேந்தி, அரிமா சங்க நிர்வாகிகள் மணிமாறன், சவுந்தரராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் சத்தியராஜ், ஞானசேகரன், கராத்தே பயிற்சியாளர் ரவிக்குமார், சத்தியமூர்த்தி பங்கேற்றனர் . பள்ளி முதல்வர் ஆண்டனிராஜ் நன்றி கூறினார்.