மேலும் செய்திகள்
ரகளை செய்தவர் கைது
19-Dec-2024
புதுச்சேரி : பொது இடத்தில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.உருளையன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட கடலுார் சாலையில் இரண்டு நபர்கள் குடிபோதையில், பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு சென்று, பொதுமக்களிடம் தகரா றில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.விழுப்புரம் மாவட் டம், வானுாரை சேர்ந்த புவனேஷ், 21; பிரகாஷ், 34; என்பது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.இதேபோல், மணக்குள விநாயகர் கோவில் வீதி யில் பொது இடத்தில் மது அருந்தியதாக குரு, 24; என்பவர் மீது பெரியகடை போலீசாரும், முத்தியால்பேட்டை பாரதி வீதியில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வைத்திக்குப்பத்தை சேர்ந்த முருகன், 32; மீது முத்தியால்பேட்டை போலீசாரும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
19-Dec-2024