உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு

கடலுாரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு

கடலுார் : கடலுார் அண்ணா விளை யாட்டு மைதானத் தில் நேற்று துவங்கிய ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு முகாமில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர்.அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு, 2024ம் ஆண்டிற்கான ஆள் சேர்ப்பு முகாமிற்கு கடந்த பிப்ரவரி 14 மற்றும் 15ம் தேதிகளில் ஆன்லைனில் எழுத்து தேர்வு நடந்தது. அதில் தேர்ச்சி பெற்ற கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு உடற்தகுதி தேர்விற்கான முகாம் கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது. இந்த முகாம் வரும் 13ம் தேதி வரை நடக்கிறது.நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி முதல் நேற்று காலை 6:00 மணி வரை நடந்த முகாமில் 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இவர்களின் கல்வி, ஜாதி, வருமானம், நன்னடத்தை, திருமணம் ஆகாதவர் மற்றும் பான்கார்டு உள்ளிட்ட சான்றுகளை சரிபார்த்தனர். தொடர்ந்து உடற்தகுதி தேர்விற்கான ஓட்டப்பந்தயம் நடந்தது.அப்போது, திருவண்ணாமலை மாவட்டம், நரியம்பாடியை சேர்ந்த மோகன், 20; வீராணங்கள்சங்கம் மோகன்குமார்,19; ஆகியோருக்கு காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. உடன் இருவரும் கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை