கடலுாரில் பள்ளி மாணவர்களுக்கு கலை பண்பாட்டுத்திறன் போட்டிகள்
கடலுார்: கடலுாரில் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கலை பண்பாட்டுத் திறன் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டது.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், மற்றும் கிராமிய நடனம் போட்டிகள் மஞ்சக்குப்பம் ஜெயின்ட் ஜோசப் பள்ளியில் நடந்தது. போட்டி 5 முதல் 8 வயது, 9 முதல் 12 வயது, 13 முதல் 16 வயது என மூன்று பிரிவுகளாக நடந்தது. தஞ்சாவூர் மண்டல உதவி இயக்குனர் செந்தில்குமார், வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசு, ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் ரிமன்ராஜ், ஓவிய ஆசிரியர் மனோகரன், சிலம்ப ஆசிரியர் ரகுநாத், பரதநாட்டிய ஆசிரியை வள்ளி, குரலிசை ஆசிரியை விஜயஸ்ரீ உட்பட பலர் பங்கேற்றனர்.