மேலும் செய்திகள்
காமாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
03-May-2025
கடலுார்: பூங்குணம் அஷ்டபுஜ வாராஹி அம்மன் கோவிலில், வரும் 11ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.பண்ருட்டி அடுத்த பூங்குணம் கிராமத்தில் விஷ்ணுவின் வாராக அம்சமான அஷ்டபுஜ வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நாளை 10ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 11ம் தேதி காலை 9:20 மணிக்கு யாக சாலையில் இருந்து புனித நீர் கொண்டு செல்லப்பட்டு, 9:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை வாராஹி அம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
03-May-2025