உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில், விருத்தாசலம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தலைவர் சசிக்குமார் தலைமை தாங்கினார். செயலர் மணிகண்டன், பொருளாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். இதில், நிர்வாகிகள் அருள், சக்திவேல், சுகுமார், காசிராமன், வெங்கடேசன், பரணிதரன், காசிநாதன், சங்கரன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தி.மு.க., தேர்தல் அறிக்கையின் படி, தமிழகத்தில் கட்டட பொறியாளர் கவுன்சில் அமைக்க வேண்டும். பொறியாளர்கள் ஒரு இடத்தில் பதிவு செய்தால், மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பதிவுகளை ஏற்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை