உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பண்ருட்டி தொகுதியில் அஸ்வத்தாமன் போட்டி?

 பண்ருட்டி தொகுதியில் அஸ்வத்தாமன் போட்டி?

ப ண்ருட்டி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட் டியிட முன்னாள் அமைச்சர் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ் ஆகியோர் ஆயத்தமாகி வருகின்றனர். அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தால் பண்ருட்டி தொகுதி கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்படும் என அக்கட்சி மாவட்ட செயலாளர் சிவக் கொழுந்து கூறி வருகிறார். அதேபோல, பா.ம.க., இணைந்தால், அந்த கூட்டணியில், தரப்பில் டாக்டர் கவுரிசங்கர் போட்டியிட தயாராகி வருகிறார். இந்நிலையில், பா.ஜ., சார்பில் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பண்ருட்டியில் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு நிர்வாகிகள் மற்றும் நகர, ஒன்றிய முக்கிய பிரமுகர்களை சந்தித்து முன்னேற்பாடாக பணிகளை துவக்கியுள்ளார். ரயில் பயணிகள் சார்பில், பண்ருட்டியில் திருப்பதி - மன்னார்குடி ரயில் நின்று செல்ல விடுக் கப்பட்ட கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற் கொண்டார். இந்நிலையில் பண்ருட்டியில் பா.ஜ., போட்டியிட போவதாக வந்த தகவலால் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பியவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி