| ADDED : நவ 22, 2025 07:26 AM
புதுச்சத்திரம்: ஏ.டி.எம்., உடைத்து கொள்ளையடிக்க முயன்ற, வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை கே.கே. நகரைச் சேர்ந்தவர் தனசேகரன் மகன் சதீஷ், 39; கடலுார் திருப்பாதிரிபுலியூர் கிளை எஸ்.பி.ஐ., மேனேஜர். இவருக்கு நேற்று இரவு 12:15 மணிக்கு ஐதராபாத் மெயின் கண்ட்ரோலில் இருந்து, புதுச்சத்திரம் அடுத்த ஆணையம்பேட்டையில் உள்ள, எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., கேமராவை உடைத்து, மர்ம நபர் ஒருவர் திருட முயற்சி செய்வதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு சதீஷ் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஏ.டி.எம்., இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்றவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், தஞ்சாவூர் என்.கே., ரோட்டைச்சேர்ந்த ஞானபாஸ்கர் மகன் பிரவீன்மேத்யூ, 28; என தெரிந்தது. இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.