உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர்களுக்கு விருது வழங்கல் 

ஆசிரியர்களுக்கு விருது வழங்கல் 

கடலுார் : ரோட்டரி கிளப் ஆப் கடலுார் சங்கமம் சார்பில் சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் விழா நடந்தது. தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். துணை ஆளுநர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர், ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார்.விழாவில், முன்னாள் உதவி ஆளுநர் வேல்முருகன், ரோட்டரி கிளப் ஆப் சங்கமம் பொருளாளர் ஞானசேகரன், உறுப்பினர்கள் சன் பிரைட் பிரகாஷ், சந்தியா எண்டர்பிரைசஸ் முருகன், உமாசுதன் உட்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் கார்த்தீசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி