மேலும் செய்திகள்
சிறப்பு பள்ளியில் சுதந்திர தினம்
18-Aug-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் சைபர் கிரைம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விருத்தாசலம் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். ரோட்டரி உதவி ஆளுனர் அசோக்குமார், பொருளாளர் அருண்குமார் முன்னிலை வகித்தனர். ரோட்டரி தலைவர் அன்புக்குமரன் வரவேற்றார். டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். உதவி பேராசிரியர்கள் பரமசிவம், சுப்ரமணியன் வாழ்த்தி பேசினர். பேராசிரியர்கள் பிரியதர்ஷினி, ரமேஷ், பிரியா அண்ணாமலை, பிரபாகரன், ஜெயபாலகிருஷ்ணன், ரோட்டரி நிர்வாகிகள் பிரகாஷ்ராஜா, குமார், ராஜா உட்பட மாணவர்கள் பங்கேற்றனர். அதில், சைபர் குற்றங்களின் வகைகள், அவற்றால் ஏற்படும் விளைவுகள், தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
18-Aug-2025