உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரியில் விழிப்புணர்வு

மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரியில் விழிப்புணர்வு

சிதம்பரம் : சிதம்பரத்தில் உள்ள கடலுார் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரியில் 'ரேபிஸ்' நோய் குறித்த விழிப்பணர்வு முகாம் நடந்தது. மாவட்ட மருத்துவக் கல்லுாரி மற்றும் வெட் அறக்கட்டளை சார்பில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மருத்துவக் கல்லுாரி முதல்வர் திருப்பதி தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ், துணை முதல்வர் சசிகலா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் குன்னுார் பாஸ்ட்சர் நிறுவன தலைவர் டாக்டர் சிவகுமார் பேசினர். தொடர்ந்து, டாக்டர்கள் கல்யாணி, சாந்தி, தீயோ பிலஸ் ஆகியோர் ரேபிஸ் நோய் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை ஹரிஹரன், விஜில் அன்பையா, செந்தில் முருகன், சந்திரமவுலி ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ