உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் விழிப்புணர்வு மனித சங்கிலி 

எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் விழிப்புணர்வு மனித சங்கிலி 

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே,, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் போதை மருத்து எதிர்ப்பு கிளப் சார்பில் போதையில்லா தமிழ்நாடு - விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையத்தில் நடந்த மனிதசங்கிலி நிகழ்ச்சியை கல்லுாரி முதல்வர் ஆனந்தவேலு தலைமை தாங்கி, கொடி அசைத்து துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரபு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக காட்டுமன்னோர்கோயில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் ராஜகணபதி, வேணுகோபால், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் சிற்றரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விநாயகம் நன்றி கூறினோர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ