உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் பள்ளியில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி

விருத்தாசலம் பள்ளியில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசுபெண்கள் மேல்நிலை பள்ளியில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமாரி தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியர் கோவிந்தராஜ், ஓவிய ஆசிரியர் பொன்னியின் செல்வி, ஆசிரியர் மரகதம், பால்வினை நோய் ஆலோசகர் குமார், கம்மாபுரம் வட்டார மருத்துவமனை ஆலோசகர் தங்கமணி, ஆய்வக நுட்புனர் சிவக்குமார், ஆலோசகர் புஷ்பவள்ளி மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், மாணவர்களுக்குஎய்ட்ஸ், பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி நடந்தது. போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை