உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விருத்தாசலம் : சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பேராசிரியர் ஹெலன் ரூத் ஜாய்ஸ், தமிழ்வேல், சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், பேரணியை துவக்கி வைத்தார். இதில், அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.கல்லுாரியில் இருந்து ஜங்ஷன் ரோடு வழியாக விருத்தாசலம் பஸ் நிலையம் வரை மாணவர்கள் பேரணியாக சென்று சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை